மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்கிறேன்: முதலமைச்சரை சந்தித்தபின் வடிவேலு பேட்டி!
- IndiaGlitz, [Wednesday,July 14 2021]
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த வடிவேலு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து வடிவேலுவை திரையுலகினர் ஒதுக்க தொடங்கினர். இதனால் அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் திரையுலகில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ளதை அடுத்து மீண்டும் நிறைய படங்களில் நடிக்க தொடங்கி உள்ளேன் என வடிவேலு கூறியுள்ளார். சற்றுமுன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய வடிவேலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் ’முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஐந்து லட்சம் வழங்கினேன். ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய முதல்வர் என்று புகழாரம் சூட்டினார். மேலும் உலகமே உற்று நோக்கும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய வடிவேலு மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்