வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்: வைரலாகும் வடிவேலு வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு சமீபத்தில் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவில் கூறியபோது, ‘மனித நேயங்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
தற்போது நடந்துகொண்டிருப்பது ஒரு போர். உலக நாடுகள் அனைத்தும் அணுகுண்டுகள், ஆயுதங்களையெல்லாம் கைவிட்டுவிட வேண்டும். மருத்துவ உலகம் தலைதூக்கி நிற்கவேண்டும். தற்போது மருத்துவ உலகமே திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் சொல்வதை கேட்டால் போதுமானது. அவர்கள் தான் நமக்கு கடவுள் போன்றவர்கள். வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அது கோடு, இது வீடு. ரோட்டை தாண்டியும் வரக்கூடாது என்று அரசு சொல்லிவிட்டது.
இந்த காலகட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்கும் பாடம்தான் காலம் முழுவதும் அவர்கள் மனதில் நிலைத்திருக்கும். இதுதான் அதற்கான சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்துள்ளார். யாருக்கும் கை கொடுக்கக்கூடாது, முத்தம் கொடுக்க வந்தால் அனுமதிக்கக் கூடாது போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்கள் பிற்காலத்தில் எவ்வளவு பெரிய அதிகாரிகளாக ஆனாலும் அவர்களுக்கு இப்போது சொல்லிக்கொடுக்கும் விஷயம் மனதில் இருக்கும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கடவுள் வழங்கியுள்ளார். அதை பயன்படுத்தி அவர்களை நல்லபடியாக வளர்த்து விட வேண்டும்.
இவ்வாறு வடிவேலு பேசியுள்ளார்.
மனிதநேயங்கள் ஒன்று சேரனும்
— Actor Vadivelu (@VadiveluOffl) April 23, 2020
மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் ?? pic.twitter.com/nmlFqoyltr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments