அகல்யா வெங்கடேசன்: ரீஎண்ட்ரிக்கு முன்பே வைரலாகும் வடிவேலு வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
வைகைப்புயல் வடிவேலு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பதும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டதை அடுத்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
லைகா நிறுவனத்தின் 5 திரைப்படங்களில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் அவற்றில் ஒன்று சுராஜ் இயக்கும் ’நாய் சேகர்’ என்றும் தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல விஜே அகல்யா வெங்கடேசன், வடிவேலுவை சந்தித்து வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டார். அதில் அவர் வடிவேலுவிடம் தனது பெயரை ஒரே ஒருமுறை சொல்லும்படி கேட்க அதற்கு வடிவேலு தனது பாணியில் அவரது பெயரைச் சொல்ல இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
வடிவேலுவை இது மாதிரி பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்றும் விரைவில் அவரை திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
#VadiveluForLife ♥️♥️♥️thalaivaaa pic.twitter.com/Mr4qiRIY3U
— Akalya Venkatesan (@iamakalya) September 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments