சிம்புவுக்கு வடிவேலு கூறிய அறிவுரை

  • IndiaGlitz, [Friday,October 09 2015]

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் சிம்பு, விஷாலை நரி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவின் பேச்சு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நகைச்சுவை நடிகர் வடிவேலு, 'நடிகர் சங்க தேர்தல் தொடர்பான விஷயத்தில் யாரையும் தவறாக பேசக்கூடாது என சிம்புவுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார். சிம்பு அடிப்படையில் நல்லவர் என்றும், ஆனால் விஷால் நரி வேலை செய்கிறார் என்று சிம்பு பேசியது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் சங்க தேர்தலை தவிர்க்க சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக கூறிய வடிவேலு, விஷால் அணியினர்களை கமல் தூண்டிவிடுவதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் யாரையும் யாரும் தூண்டிவிடவில்லை என்றும் கூறினார்.

மேலும் களவு போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிக்கவும், அனைத்து கலைஞர்களுக்கும் நல்லது செய்யவும் பாண்டவர் அணி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றும் வடிவேலு கூறியுள்ளார்.

More News

சமாதானத்திற்கு தயாரா? விஷாலின் அதிரடி முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை தவிர்க்க சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இரு அணிகளையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள்...

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும்...

நடிகர் சங்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் ...

சமாதான பேச்சுவார்த்தை குறித்து பாண்டவர் அணி எடுத்த முக்கிய முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும்...

விஜய்யின் 'புலி'க்கு கைகொடுத்த பிரபல இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...