அரசு மருத்துவமனைக்கு மாற்றியது ஏன்? வடிவேல் பாலாஜி உறவினர்கள் விளக்கம்!

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி அவர்கள் இன்று மதியம் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் வடிவேல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் உறவினர்கள் மேலும் கூறியபோது, ‘வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையாலேயே அவர் உயிரிழந்தாகவும் பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்றும் அவரது சிகிச்சைக்காக சுமார் 20 லட்சம் வரை செலவு செய்தும் காப்பாற்ற முடியவில்லை என வேதனையாக இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் பணத்தை பறிக்கவே தனியார் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாலேயே இறுதியில் அரசு மருத்துவமனையை நாடி சென்றோம் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

More News

வடிவேல் பாலாஜி மறைவு குறித்து தனுஷ் டுவீட்!

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி அவர்கள் திடீரென இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தி சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி பெரிய திரையில் உள்ள நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

வடிவேல் பாலாஜியுடனான மலரும் நினைவுகள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் கோளாறு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கடைசியா ஒருமுறை அவரை பார்க்க கூட முடியலையே: மைனா நந்தினி உருக்கம்

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி இன்று திடீரென உடல்நலக் குறைவால் காலமான செய்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!!! எந்த மாவட்டத்திற்கு அதிக பாதிப்பு தெரியுமா???

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்

நீட் தேர்வுக்கு எப்படி செல்ல வேண்டும் தெரியுமா? தேசியத்தேர்வு முகமையின் புதிய அறிவிப்பு!!!

கொரோனா பரவல் தாக்குதலுக்கு இடையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற இருக்கிறது.