வடிவேல் பாலாஜி உடல் நல்லடக்கம்: கதறியழுத உறவினர்கள்- நண்பர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நல கோளாறு காரணமாக திடீரென மரணம் அடைந்தது சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனுஷ், சிவகார்த்திகேயன், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்த்தி உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் வடிவேல் பாலாஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
விஜய் சேதுபதி, உள்பட ஒரு சில பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேல் பாலாஜியின் குழந்தைகள் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை வடிவேல் பாலாஜி உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கிளம்பிய இந்த ஊர்வலத்தில் பல நட்சத்திரங்களும் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக வடிவேல் பாலாஜியின் உடலை பார்த்து அவரது நண்பர்களும் உறவினர்களும் கதறி அழுத காட்சி கண்ணீரை வரவழைத்தது. பின்னர் நுங்கம்பாக்கம் மயானத்தில் வடிவேல் பாலாஜி என் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments