எங்க பார்த்தாலும் வடக்கங்க வேலைக்கு வந்துட்டாயிங்க... லிங்குசாமியின் 'வடக்கன்' டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள ’வடக்கன்’ என்ற திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்து அவர்கள் தமிழர்களின் வேலையை பறித்துக் கொண்டிருப்பதாக சில அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது குறித்த கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான் ’வடக்கன்’ என்பது இந்த டீசரிலிருந்து தெரிய வருகிறது.

வடக்கன்கள் நம் வேலையை பறித்து விட்டார்கள் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்றும் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்று கூறும் ஒரு நபரின் கதை தான் இந்த ’வடக்கன்’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பாஸ்கர் சக்தி என்பவர் இயக்கி உள்ளார். குங்குமராஜ் முத்துசாமி, வைர மாலா, ரமேஷ் வைத்யா, சமீரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜனனி இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.