close
Choose your channels

சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு எதிரொலி: 'வடக்கன்' படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு..!

Monday, June 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாரதி சக்தி இயக்கத்தில் உருவாகி இருந்த ‘வடக்கன்’ என்ற திரைப்படம் மே 24ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதி சக்தி இயக்கத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைர மாலா, ரமேஷ் வைத்யா, சமீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனனி இசையில் உருவான திரைப்படம் ’வடக்கன்’. இந்த படம் சென்சார் சென்றபோது பெரிய அளவில் கட் இல்லை என்றாலும் ‘வடக்கன்’ டைட்டிலுக்கு சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து புதிய டைட்டில் வைக்க கால அவகாசம் தேவைப்பட்டதால் மே 24ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தமிழர்களின் வேலையை வட இந்தியர்கள் பறித்து விட்டார்கள் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் தமிழ்நாட்டில் இருந்து அவர்களை வெளியேற்றுவோம் என்றும் கூறும் ஒரு நபரின் கதை தான் ‘வடக்கன்’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’ரயில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment