close
Choose your channels

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இணையும் 'வடசென்னை' பிரபலம்..!

Thursday, June 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெற்றிமாறன் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணியில் பிசியாக இருப்பதால் இந்த பணியை முடித்தவுடன் ‘வாடிவாசல்’ படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘வடசென்னை’ படத்தில் நடித்த பிரபலம் ஒருவர் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்தான் இயக்குனர் அமீர்.

‘இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஒன்றில் நடிக்க பலர் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் ஆனால் வெற்றிமாறன் அந்த கேரக்டரில் நான் தான் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் இதனை அடுத்து அந்த படத்தில் நான் நடிக்க உள்ளேன் என்றும் அமீர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சூர்யாவிடம் இரண்டு காளைகள் வளர்ந்து வருவதாகவும் அந்த காளைகள் தான் இந்த படத்தில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அந்த காளைகளுடன் தானும் சில காலம் பழக உள்ளதாகவும் அமீர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment