தனுஷ்-விஜய்சேதுபதி வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. சென்னை ராயபுரம் பகுதியில் சுமார் 30 முதல் 35 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதன் காரணமாக இந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால் அதில் சிறிதும் உண்மை இல்லையென்றும், இந்த படத்தில் விஜய்சேதுபதி தனக்கு கொடுத்த கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பார் என்றும் கூறி வதந்திக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
தனுஷ் தற்போது 'பவர்பாண்டி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியிலும், 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பிலும் உள்ளார். இந்த பணிகள் பிப்ரவரியில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் அவர் மீண்டும் 'வடசென்னை' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments