நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணமா? ஆய்வின் முடிவு வெளியீடு!

  • IndiaGlitz, [Friday,October 22 2021]

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்தார் என வதந்தி கிளம்பியது.

இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதாரத்துறை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது. அதில் விவேக் மரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில் கடந்த சில வாரங்களாக நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? என்று தேசிய தடுப்பூசி வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்றும் விவேக் அவர்கள் ரத்த உயர் அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. 

ஒரு வயதை பூர்த்தி செய்த செல்ல மகன்: மேக்னாராஜின் நெகிழ்ச்சியான பதிவு

நடிகை மேக்னாராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த  ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார்

சமந்தா உடலில் நாகசைதன்யா டாட்டுக்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள நிலையில் அவரது உடலில் மூன்று டாட்டுக்கள் இருப்பதாகவும் அந்த டாட்டுக்கள் அனைத்துமே

மாறி மாறி குறை சொல்லும் அபிஷேக், பிரியங்கா, நிரூப்: கூட்டணியில் திடீர் பிளவா? ஸ்ட்ராட்டஜியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒரு வாரம் 18 போட்டியாளர்களும் ஒற்றுமையாக இருந்த நிலையில் இரண்டாவது வாரமே அணி அணியாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. 

மஞ்சள் மேகம் ஒரு பெண்ணாக மாறி… நடிகை கீர்த்தி சுரேஷின் மாஸ் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் "மகாநடி" திரைப்படத்தில்