கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பனதா? ஆய்வு கூறும் புதுத்தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்தில் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் 18 வயதிற்கும் மேலுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாமா? என்ற சந்தேகம் பரவலாக இருந்துவரும் நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள வைரலாஜி மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி, அவர்களது கருவுக்கும் நஞ்சுக் கொடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அத்துடன் கர்ப்பக் கால ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான ஆபத்துகள் மற்றவர்களைவிட 70% அதிகமாக இருப்பதாகக் கூறிய விஞ்ஞானிகள், நோய்த்தொற்றுக்கான கடுமையான பாதிப்பு அபாயம் 10% அதிகமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளுமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout