அரசு,தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்...! மத்திய அரசு...!
- IndiaGlitz, [Wednesday,April 07 2021]
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் போதும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வரும் ஏப்ரல்-11-ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்த நிலையில், தினசரி பாதிப்பு என்பது 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. பொதுவாகவே 45-வயதிற்கும் மேலுள்ள மக்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது வரை கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 25,14,39,598- பேர் என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வயது வரம்பில் மாற்றம் இல்லை எனவும், பணியை செய்ய 100 பணியாளர்கள் இருந்தால் போதும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.