காலியான எம்.பி பதவிகள்...! திமுக -வில் யாருக்கு வாய்ப்பு..?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் 3 எம்.பி பதவிகள் காலியாக இருப்பதால், விரைவில் தேர்தல் நடக்கவிருப்பதாகவும், அதில் ஆளும்கட்சியே வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 159-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக-வைச்சார்ந்த ராஜசபா எம்.பி-க்கள் இருவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் கேபி. முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் முறையாக போட்டியிட்டு வென்றனர். இவர்கள் எம்.பி-களாக இருப்பதால் இதே பதவியில் இருப்பார்களா..? அல்லது எம்எல்ஏ பதவியை ஏற்பார்களா..? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்தது. முனுசாமியின் பதவிக்காலம் முடிய இன்னும் 5 ஆண்டுகளும், வைத்தியலிங்கத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் 1 வருடமும் உள்ளது. இந்தநிலையில் அண்மையில் இருவரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதிமுக-வைச் சார்ந்த முகமது ஜான் என்ற எம்.பி கடந்த மார்ச்- ல் காலமானார். இவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. இதனால் மூன்று எம்.பி பதவிகளும் காலியாகவே உள்ளன.
நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக-வின் வெற்றியை தொடர்ந்து, நடைபெறும் எம்.பி தேர்தலிலும் ஆளும்கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
திமுகவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்...?
எம்.பி தேர்தல் குறித்து திமுக நிர்வாகி கூறியதாவது...
மூன்று எம்.பி-களின் பதவிக்காலம் 1 ஆண்டு, 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என இருப்பதால், ஒரு தொகுதியில் காங்கிரஸ்-க்கும், இரண்டு தொகுதிகளில் திமுக போட்டியிடவும் வாய்ப்புள்ளது.
போடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும், ஈரோடு,மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் வாய்ப்புகள் தர விவாதம் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments