காலியான எம்.பி பதவிகள்...! திமுக -வில் யாருக்கு வாய்ப்பு..?

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

தமிழகத்தில் 3 எம்.பி பதவிகள் காலியாக இருப்பதால், விரைவில் தேர்தல் நடக்கவிருப்பதாகவும், அதில் ஆளும்கட்சியே வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 159-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக-வைச்சார்ந்த ராஜசபா எம்.பி-க்கள் இருவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளனர்.



மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் கேபி. முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் முறையாக போட்டியிட்டு வென்றனர். இவர்கள் எம்.பி-களாக இருப்பதால் இதே பதவியில் இருப்பார்களா..? அல்லது எம்எல்ஏ பதவியை ஏற்பார்களா..? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்தது. முனுசாமியின் பதவிக்காலம் முடிய இன்னும் 5 ஆண்டுகளும், வைத்தியலிங்கத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் 1 வருடமும் உள்ளது. இந்தநிலையில் அண்மையில் இருவரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதிமுக-வைச் சார்ந்த முகமது ஜான் என்ற எம்.பி கடந்த மார்ச்- ல் காலமானார். இவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. இதனால் மூன்று எம்.பி பதவிகளும் காலியாகவே உள்ளன.

நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக-வின் வெற்றியை தொடர்ந்து, நடைபெறும் எம்.பி தேர்தலிலும் ஆளும்கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.



திமுகவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்...?

எம்.பி தேர்தல் குறித்து திமுக நிர்வாகி கூறியதாவது...

மூன்று எம்.பி-களின் பதவிக்காலம் 1 ஆண்டு, 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என இருப்பதால், ஒரு தொகுதியில் காங்கிரஸ்-க்கும், இரண்டு தொகுதிகளில் திமுக போட்டியிடவும் வாய்ப்புள்ளது.
போடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும், ஈரோடு,மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் வாய்ப்புகள் தர விவாதம் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

More News

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்? உண்மையை உடைக்கும் வீடியோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி 75 இடங்களில் வெற்றிப்பெற்று தோல்வியைத் தழுவியது.

உன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம்: மாறன் மறைவு குறித்து மதிமுக பிரமுகர்

விஜய் நடித்த கில்லி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவால் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதிமுக பிரமுகர் மல்லை சத்யா

செவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் அப்டேட் தந்த தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த மார்ச் மாதம் என்றும் அதன் பின்னர் மே மாதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறை… மீண்டும் 26 நோயாளிகள் உயிரிழந்த அவலம்!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுக்கவே ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது.