close
Choose your channels

'வாழ்' பட நாயகி யார் தெரியுமா?

Sunday, July 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய ’அருவி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள திரைப்படம் ’வாழ்’. இந்த திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’அருவி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பிரதீப் தான் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் அவரது நடிப்பு இந்த படத்தில் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளவர் டிஜே பானு. இவர் தனது நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்பதும், ’அருவி’ படத்தில் நடித்த அதிதி பாலன் நடிப்புக்கு இணையாக இவரது நடிப்பும் இந்த படத்தில் இருந்ததாக அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்த தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதிப் போட்டிகளில் தகுதி பெற்றவர்களில் ஒருவர் டிஜே பானு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில விளம்பரப் படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் டிஜே பானு நடித்துள்ளார். அமேசான் பிரைம் வெளியான தொடரில் ஒன்றிலும் நடித்துள்ளார். இவர் தற்போது ’வாழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். ’அருவி’ திரைப்படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றாலும் அதிதி பாலனுக்கு வேறு திரைப்படங்கள் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் டிஜே பானுவுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’வாழ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளதால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஃபாலோயர்கள் அதிகமாகி கொண்டே வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment