தனுஷின் 20 வருட பயணம்: 'வாத்தி' படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகி உள்ளதை அடுத்து இந்த இருபது ஆண்டுகளில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். மேலும் நேற்று தனது 20 ஆண்டு திரையுலக பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் அவர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தனுஷின் 20 ஆண்டு பயணத்தை குறிப்பிடும் வகையில் ‘வாத்தி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனுசின் ’துள்ளுவதோ இளமை’ தோற்றம் மற்றும் ’வாத்தி’ தோற்றம் ஆகிய இரண்டும் சேர்ந்தால் போல் உள்ள இந்த போஸ்டரில் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கும் ‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
It is not a simple feat to stay in the hearts of people for years and @dhanushkraja sir is doing it with ease! #2DecadesOfRenownDHANUSH ✨#Vaathi #SIRMovie - First Look Out Soon! ?? @iamsamyuktha_ #VenkyAtluri @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya pic.twitter.com/KN4Y4DT0db
— Sithara Entertainments (@SitharaEnts) May 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com