'வாத்தி' இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலம் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,May 14 2023]

தனுஷ் நடித்த ’வாத்தி’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

’வாத்தி’ படம் 100 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கி அட்லுரி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் நாயகனாக பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ’வாத்தி’ படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் ’வாத்தி’ படம் போலவே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் என்று கூறப்படுகிறது.

More News

ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி.. அதே நாளில் ரிலீஸாகும் இன்னொரு படம்..!

ஆர்யா நடித்த 'காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது.

வர வர கிளாமர் ஏறிக்கிட்டே வருது, அடுத்து பிகினி தானா.. சூரிய பிரபாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்..!

தமிழ் திரைப்படங்களில் குத்தாட்டம் போடும் நடிகை சூரிய பிரபாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

எனக்கு தெரிஞ்சு தெய்வம் கோவில்ல இல்ல, என் எதிர்ல இருக்கு, நீ தான்பா என் தெய்வம்: 'விமானம்' டீசர்

சமுத்திரக்கனி மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான 'விமானம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சட்டமும் வெளியாகி

இரவுக்கு ரூ.25,000, பகலுக்கு ரூ.15,000: விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகள் அதிரடி கைது..!

இரவுக்கு  ரூ.25,000, பகலுக்கு ரூ.15,000 என இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோ பெட்ரோல்… பீர் ஊற்றினால் போதும்… அசர வைக்கும் புதுக் கண்டுபிடிப்பு!

உலகம் முழுக்கவே எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலையேற்றம் போன்ற சிக்கலை சந்தித்து வருகிறோம்.