தனிமனித இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' டான்ஸ்: அனிருத் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. கடந்த ஏப்ரல் 7ஆம் தேதியே இந்த படம் வெளியாக இருக்க வேண்டிய நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காலவரையின்றி ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் இந்த பாடல்கள் கவர்ந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் புரியாத வெளிநாட்டினர் கூட இசைக்காக இந்த பாடலை ரசித்து நடனமாடியது குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது
இந்த நிலையில் வெளிநாட்டவர் சிலர் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதுவும் அவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து இந்த பாடலுக்கு நடனமாடியதை ஆச்சரியத்துடன் அனிருத் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் முதியவர்கள் சிலரும் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
#VaathiComing following #SocialDistancing ?? pic.twitter.com/KuQDhPd8nz
— Anirudh Ravichander (@anirudhofficial) May 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com