நல்லவருக்கு ஓட்டுப்போடுங்கள்...! அதிமுக-விற்கு  வாக்கு சேகரித்த வாசன்....!

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]


'பொல்லாதவர்களுக்கு வாக்கு போடாதீர்கள், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்' என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மூன்றாவது முறையாக களமிறங்குகிறார். இவரை ஆதரிக்கும் வகையில் , தமாகா தலைவர் ஜி,கே.வாசன் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்த அவர் கூறியிருப்பதாவது, நல்ல திட்டங்களை கொடுப்பவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும், உங்கள் தொகுதி அமைச்சர் நல்ல குணம் படைத்தவர், இவருக்கு வாக்களித்தால் நீங்கள் வளர்வீர்கள், உயர்வீர்கள், இதில் மாற்று கருத்து இல்லை என்று கூறி வாக்குகள் சேகரித்தார். இவருடன் அதிமுக கட்சித்தலைவர்கள் ,தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழிசையால் புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்...!

சாலையில் விபத்து நேர்ந்த ஒருவருக்கு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

கருத்துக் கணிப்பு என்பவை பொய்ப் பிரச்சாரங்களே… தொண்டகளுக்கு கடிதம் எழுதிய இ.பி.எஸ், ஓ.பி.எஸ்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கருத்துக் கணிப்பு பெயரில் நடைபெறும் பொய்ப்பிரச்சாரங்களை நம்பவேண்டாம் என தமிழக முதல்வர்

நான் ரொம்ப டயர்டு ஆகிவிட்டேன், என்னால முடியலை: ராதாரவி குறித்து சின்மயி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியதாக அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

தான் பட்ட அவமானத்தை முதல்முறையாக கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி! 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே ஷிவாங்கி ரசிகர்களுக்கு அறிமுகம் என்றாலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்

எனக்கு கிடைத்த விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்‌: ரஜினிகாந்த் நன்றி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று காலை திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிரதமர் மோடி,