லிப் சர்வீஸ் தான்..இவ்வளவு நாள் செஞ்சிங்காளா...! கமலை பார்த்து வானதி நறுக் கேள்வி...!

  • IndiaGlitz, [Wednesday,March 31 2021]

கமல்ஹாசனை பார்த்து, இத்தனை நாட்கள் உதட்டுக்கு மட்டுமே சேவை செஞ்ச நீங்க, என்னை பார்த்து துக்கடா அரசியல் வாதி என்று சொல்லலாமா..? என்று கேள்விக்கனைகளை தொடுத்துள்ளார் வானதி சீனிவாசன்.

கோவை தெற்குத்தொகுதி தற்போது ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கிய நாளிலிருந்து, அத்தொகுதியில் விழா போல பரப்புரை செய்து வருகிறார்கள் வேட்பாளர்கள்.

இங்கு பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் சேலஞ்சர் துறை, நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனும் போட்டியிடுகிறார்கள். ஆனால் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, கமலுக்கும், வானதி ஸ்ரீனிவாசனுக்கும் தான் கடும்போட்டி நிலவி வருகிறது. கருத்து கணிப்புகளில் கூட யார் வெற்றிவாகை சூடப்போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை. காரணம் நாளுக்கு நாள் பிரச்சாரத்தில் முனைப்பு காட்டி வருகிறார்கள் வேட்பாளர்கள்.

வழக்கமாக இருகட்சியினரும், ஒருவரையொருவர் குறை கூறி பேசுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் சென்ற 2 நாட்களாக கமல் மற்றும் வானதி ஸ்ரீனிவாசனுக்கும் இடையேயான மோதல் அதிரித்துள்ளது.

முதலில் கமல் வானதியை பார்த்து, இவர் துக்கடா அரசியல்வாதி என்று பரப்புரை செய்தார். மக்கள் நீதி மய்யம் இளைஞர் பாசறையே போதும், உங்களிடம் பேச என்றும் தரம் தாழ்த்தி பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன் கூறியிருப்பதாவது,

நான் கோவைல பிறந்து, அரசு பள்ளியில் பயின்று, வழக்கறிஞர் ஆனவள். குடும்பத்தை விட்டுவிட்டு, நம் மாவட்டத்திற்காக ஏராளமான பணிகளை செய்துள்ளேன். கடந்த 5 வருடங்களில் நான் செய்த பணிகள் குறித்து, சமூக ஊடகங்களில் சென்று பார்த்தால் தெரியும். சாதாரண குடும்பத்தில் பிறந்து , அரசியல்வாதியானால் இப்படி தான் பேசுவீங்களா...? என்று மனவலியுடன் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். வானதி பக்கம் உண்மை உள்ளது என பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றளவில் வானதியின் பிரச்சாரம் சற்று வேறுவிதமாகஇருந்துள்ளது. கமலை பார்த்து இத்தனை நாட்கள் லிப் சர்வீஸ் பண்ணிட்டு இருந்தீங்களா ..? அதிலும் 2 அர்த்தங்கள் உள்ளது, ஒன்று உதட்டளவில் வேலை செய்வது...? மற்றொன்று உதட்டுக்கு மட்டுமே வேலை கொடுப்பது..? இப்படிப்பட்ட நீங்கள் என்னைப்பார்த்து துக்கடா அரசியல்வாதி என சொல்கிறீர்கள்... நீங்க சொல்வதை கேட்பதற்கு மக்கள் ஒன்னும் முட்டாள் இல்லை. இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்லியே ஆகனும் என்றும் கூறியுள்ளார்.

பாஜகவில் மாநில துணைத்தலைவர் முதல் தேசிய பொறுப்பு வரை பல பதவிகள் வகித்து, கட்சிக்கு தொண்டாற்றி வருகிறார். மற்றவர்களை போல் அல்லாமல், பொறுமையுடன் பேசக்கூடிய சிறந்த அரசியல்வாதி வானதி. எதிர்க்கட்சியிடம் கூட கண்ணியமான விமர்சனத்தை வைத்தும், நாகரீகமான வார்த்தைகளை கூறியும் தான் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.