பாடகர் தம்பதியின் மகன் நடித்துள்ள ஆல்பம் பாடல்....! ஜோடி சேர்ந்த முன்னணி சீரியல் நடிகை....!

ப்ரீத்தி ஷர்மா....!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி -2 சீரியல் மூலம் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான், நடிகை ப்ரீத்தி ஷர்மா. கடந்த 1999-ல், ஜனவரி 31-இல் பிறந்த இவர் தற்போது தென்னிந்திய சேனல்களில் நடித்து முக்கிய பிரபலமாக வலம் வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்திக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சென்ற 2018-ல் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் துணை நடிகையாக, தமிழில் அறிமுகமானார். இதன்பின்பு தான் சித்தி நாடகத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் சன் சேனலில் பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே போன்ற தொடர்களில், கெஸ்ட் அப்பியரன்ஸ்-ஆகவும் தோன்றியுள்ளார்.

கென் கருணாஸ்.....!

பாடகர், காமெடி நடிகரான கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் கருணாஸ் தம்பதியின் மகன் தான் கென். இவர் அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மகனாக தத்ரூபமாக நடித்து இருப்பார். ரகளபுரம், அழகு குட்டி செல்லம், இது காதல் வரும் பருவம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

‘வாடா ராசா’ ஆல்பம் பாடல்.....!

பாடகி கிரேஸ் மற்றும் கென் இணைந்துள்ள ‘வாடா ராசா’ என்ற ஆல்பம் பாடல் இன்று வெளியாகவுள்ளது. இந்த பாடலில் நடிகை ப்ரீத்தி ஷர்மாவும் இணைந்துள்ளார். வேட்டிய எடுத்து கட்டிக்கோ.. கெத்தா இருக்கும் பாத்துக்கோ.. என்ற வரிகளுடன் கூடிய, ப்ரோமோ வெளியான நிலையில், ரசிகர்கள் இந்த ஆல்பம் பாடலுக்காக காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

சாண்டி மாஸ்ட்டர் நடனம் அமைத்து, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஆல்பம் சோனி லேபிளுக்காக தயாரிப்பு நிறுவனமான தி ரூட் இந்த ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது.

 

More News

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான முக்கியத் தகவல்!

இந்தியாவில் 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆய்வினை

கொரோனா என நினைத்து தற்கொலை....! ஆதரவற்றோருக்கு சொத்தை எழுதி வைத்த தம்பதி.....!

கர்நாடகாவில் கொரோனா என நினைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள், தங்களுடைய சொத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்துள்ளனர்.

செல்வராகவனின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படம் 'சாணிக்காகிதம்' என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் 3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

2 தவணைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின்பு 3 ஆவதாக “பூஸ்டர் டோஸ்“

மயானத்திற்கு வழிவிடாமல் விவசாயம்....! அதற்கான போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்....!

கரூர் மாவட்டத்தில், நெரூர் தென்பாகம் பகுதிக்கு அருகில் உள்ள ஊர் தான் வேடிச்சிபாளையம்