ராகவா லாரன்ஸ் வெளியிட்ட 'வா தலைவா போருக்கு' பாடல் வரிகள்

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு அழைக்கும் பாடல் ஒன்றை ராகவா லாரன்ஸ் இன்று காலை வெளியிடவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதோ அந்த பாடலின் வரிகள்

போதும் பட்டதெல்லாமே போதும், மாத்துவோம்
யாரு என்ன சொன்னாலும் ஊர மாத்துவோம், 
ஓட்டு போட்டவனை முட்டாளுன்னு பார்க்குறாங்க
வா கேட்டிடலாம், வா தூக்கிடலாம்
உன்னை போல ஒரு நல்லவரு தேவைங்க
நீ வந்தா மாற்றம் தானே
தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா

நல்ல நேரம் பொறக்கணும் இங்க
சிஸ்டம் மாற கூப்பிடறோம்
இஷ்டப்பட்டு நீங்க வந்தா
எப்போதுமே தோள் கொடுப்போம்
விட்ட குறை தொட்ட குறை
உனக்காக காத்திருப்போம்
ஒரு வார்த்தை நீ சொல்லிப்புட்டா
தமிழ்நாடே தூள் பறக்கும்
தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா

உங்க கூட்டம் அன்பு கூட்டம்
அடங்கி ஒடுங்கி இருக்குதுங்க
கண்ணை காமி புயல் வரும் இங்க
சாமி கூட அழைக்குதுங்க
ரெண்டில்  ஒண்ணு பார்த்திடலாம்
களத்துக்கு வா தலைவா
கொண்டு வந்தது எதுவுமில்லை
கொண்டு போக எதுவுமில்லை
தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா