உலகில் முதல்முறையாக விஷால் எடுத்திருக்கும் ''V Shall' என்ற புதிய முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நலிந்த நடிகர், நடிகையர் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த உதவி மேலும் விரிவடையும் வகையில் புதிய செயலி ஒன்றை தொடங்கி அதன் மூலம் உலகில் உள்ள உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைக்க ஒரு முயற்சி எடுத்துள்ளார். அதுதான் 'V Shall' செயலி. விஷால் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் உலகில் முதல்முறையாக சமூக சேவைக்காக தொடங்கப்பட்ட செயலியாக இந்த செயலி கருதப்படுகிறது.
இந்த செயலி குறித்து விஷால் கூறியதாவது: உலகில் எவ்வளவோ ஏழை, எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளே இல்லாமல் தவித்து வருகிறார். இதுபோன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இதுபோன்று உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்ப காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காக 'V Shall' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்லி மூலமாக உண்மையாக உதவி தேவைப்படுபவர்களும், உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவவோ, உதவி பெறவோ செய்யலாம். 1170 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ கல்வி படிக்க முடியாமல் போன மாணவிக்கு ஏற்பட்ட துயரம் போல் இனி யாருக்கும் வராமல் இருக்க அனைவரும் இந்த செயலியை பயன்படுத்தி உதவி பெறலாம். இந்த செயலி வ்டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். விஷாலின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com