ஆன்மீகப்பழமாக மாறிய அமிதாப்: அருகில் பிரபல தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் 'உயர்ந்த மனிதன் 'என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதனையடுத்து இந்த படத்தில் அமிதாப்பின் கெட்டப் குறித்த புதிய ஸ்டில்களை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, கழுத்தில் சிகப்புத்துண்டு நெற்றியில் விபூதி,குங்குமம் என ஆன்மீகப்பழம் போன்று அமிதாப் இந்த ஸ்டில்களில் தோன்றுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறித்து கூறிய எஸ்.ஜே.சூர்யா, என்னுடைய வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான நாள் இதுதான். எனது கனவு நனவான இந்த நேரத்தில் அம்மா, அப்பா, கடவுள் ஆகியோர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இந்த படம் உருவாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு உதவி செய்ததாகவும், இந்த படத்தை அறிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ளார். அமிதாப் நடிக்கும் முதல் தமிழ்ப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happiest moment of my life ... thank you God , mom, dad for fulfilling a dream which I have never even dreamt of .... ?? toThe evergreen superstar @SrBachchan , sharing it with our super star @rajinikanth & Dir @ARMurugadoss pic.twitter.com/Dwpd2s2nJG
— S J Suryah (@iam_SJSuryah) March 31, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments