close
Choose your channels

'உத்தம வில்லன்' படத்துடன் கனெக்ஷன் ஆகும் 'தூங்காவனம்'

Monday, October 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சவுண்ட் மிக்சிங் பணி அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தனது படங்களில் நடிப்பதில் மட்டுமின்றி டெக்னிக்கல் பணியிலும் தீவிர கவனம் செலுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது விஸ்வரூபம் மற்றும் 'உத்தமவில்லன்' படங்களுக்காக அமெரிக்கா சென்று சவுண்ட் மிக்சிங் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதை ஏற்கனவே அறிந்ததே. இதேபோல் 'தூங்காவனம்' படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகளும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

'உத்தம வில்லன்' படத்தில் சவுண்ட எஞ்சினியராக பணியாற்றிய குணால்ராஜன், இந்த படத்திலும் பணிபுரிய உள்ளதாகவும், அவர் விரைவில் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவுடன் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த 'தூங்காவனம்' படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment