ஐந்து மாநில தேர்தல். உ.பியில் பாஜக முன்னிலை

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கிட்டத்தட்ட மினி பொதுத்தேர்தல் போல நடந்து முடிந்திருக்கும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை தகவலின்படி உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை 8.40 மணி நிலவரப்படி உபியில் பாஜக 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 23 இடங்களிலும், பிஎஸ்பி 16 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், அகாலிதளம் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் முன்னிலையில் இல்லை.

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.