இறப்புச் சடங்கில் ஏற்பட்ட மற்றொரு பயங்கரம்… 23 பேர் பரிதாப பலி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு இறப்புச் சடங்கின்போது மயானக்கூரை இடிந்து விழுந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிரதமர் உள்ளிட்ட பலரும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தின் முராக்நகரில் ஜெய்ராம் என்பவருக்கு அந்த ஊரின் மயானத்தில் வைத்து இறப்பு சடங்கு நடைபெற்று இருக்கிறது. இந்தச் சடங்கிற்கு ஜெய்ராமின் உறவினர்கள் பலரும் வந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு மழை பெய்ததால் மயானத்தில் உள்ள கட்டிடத்தில் அனைவரும் ஒதுங்கியுள்ளனர். ஆனால் புதிதாகக் கட்டப்பட்ட அந்தக் கட்டிடம் மழையினால் நனைந்து திடீரென இடிந்து விழுந்து இருக்கிறது. இதைச் சற்றும் எதிர்பாராத ஜெய்ராமின் உறவினர்கள் பலரும் கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மயானக்கூரை இடிந்து விழுந்த விபத்தினால் இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com