close
Choose your channels

தெறி: விஜய் மகளுக்கு பின்னணி கொடுத்த தேசிய விருது பெற்ற பாடகி

Sunday, January 31, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் படக்குழுவினர்களால் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் இந்த படத்தில் நடித்து வரும் விஜய்க்கு மகளாக பிரபல நடிகை மீனா மகள் நைனிகா மகள் நடித்து வருவதாகவும், விஜய்யின் மகள் திவ்யா ஒருசில காட்சிகளில் நடித்து வருவதாகவும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜய் மகள் திவ்யாவுக்கு ஒரு பாடல் காட்சி இருப்பதாகவும், அவருக்கான பாடலை உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.. உத்ரா உன்னிகிருஷ்ணன் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் அவர்களின் மகள் என்பதும், 'சைவம்' என்ற படத்தில் 'அழகு' என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'தெறி' படத்தில் விஜய்யுடன் சமந்தா,எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment