சிம்புவின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Tuesday,August 10 2021]

சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் செய்த காரியம் ஒன்றை அடுத்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தருக்கு சொந்தமான கார்டன் ஒன்று சென்னை மதுரவாயல் அருகே உள்ளது. இந்த கார்டனை சுத்தம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது அந்த தோட்டத்தில் ஒரு உடும்பு ஒன்று பதுங்கி இருந்ததை சுத்தம் செய்யும் பணியாளர்கள் கண்டனர்.

இதனை அடுத்து அவர்கள் தொலைபேசி மூலம் உஷா ராஜேந்தரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனே உஷா ராஜேந்தர் விரைந்து தனது கார்டனுக்கு சென்று அந்த உடும்பை பார்த்த போது அந்த உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார். இதனை அடுத்து அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் தனது தோட்டத்தில் கர்ப்பிணியான உடும்பு ஒன்று இருப்பதாக தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். வனவிலங்கு துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கர்ப்பிணியாக இருந்த உடும்பை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். கர்ப்பிணியாக இருக்கும் உடும்பை தகுந்த பாதுகாப்புடன் செல்வதற்கு வழிவகை செய்த உஷா ராஜேந்தருக்கு வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து சிம்பு ரசிகர்களும் உஷாராஜேந்தருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.