டி ராஜேந்தரின் புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் உஷா ராஜேந்தர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடந்தது என்பதும் இந்த தேர்தலில் முரளி ராமசாமி சார்பில் அணியும், டி ராஜேந்தர் சார்பில் ஒரு அணியும் போட்டியிட்டது என்பதும் தெரிந்ததே. இதில் முரளி ராமசாமி அணி வெற்றி பெற்று சமீபத்தில் பதவி ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த டி ராஜேந்தர், புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்குவதாக அறிவித்து அதற்கான ரிஜிஸ்டர் உள்பட ஒருசில ஏற்பாடுகளையும் செய்தார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்தப் புதிய சங்கத்தின் அறிமுக விழா இன்று தி நகரில் நடைபெற்றது.
இந்த விழாவின்போது டி ராஜேந்திரன் மனைவி உஷா ராஜேந்தர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்துள்ளார். இவர் ’சிம்பு எஸ்டிஆர் பிக்சர்ஸ்’ என்ற புதிய பட நிறுவனத்தை தொடங்கியுள்ளதை அடுத்து இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த புதிய சங்கத்தின் நிறுவனர்களாக டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் என்றும், செயலாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சதிஷ்குமார் என்றும் பொருளாளர் கே.ராஜன் என்றும் துணைத்தலைவர்கள் பி.டி.செல்வகுமார், சிங்கார வடிவேலன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிமுக விழா. சென்னை தி.நகர்.
— meenakshisundaram (@meenakshinews) December 5, 2020
டி,ஆர், அவர் மனைவி உஷா நிறுவனர். சிம்பு எஸ் டி ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி இதில் சேர் ந்தார். @SilambarasanTR_#tr @hariharannaidu@teamaimpr pic.twitter.com/7J0hrEkYgt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments