படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு: தேசிய விருது பெற்ற நடிகை
- IndiaGlitz, [Wednesday,April 25 2018]
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் கடந்த சில மாதங்களில் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை உஷா ஜாதவ் என்பவர் திரையுலகில் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அல்லது இருவரிடமும் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகை ஆட்டி படைக்கும் அதிகாரமிக்கவர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சகஜம் என்றும், அந்த அதிகாரமிக்கவர்கள் மீது புகார் கூறினால் நடிகைகளின் கேரியர் பாதிக்கப்படும் என்பதால் பெரும்பாலான நடிகைகள் புகார் கூறுவதில்லை என்றும் உஷா ஜாதவ் தெரிவித்துள்ளார். மேலும் படுக்கையை பகிர மறுப்பவர்கள் நடிகையாவதற்கே லாயக்கு இல்லை என்று புறந்தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். உஷா ஜாதவ்வின் இந்த கருத்து பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.