ஒரே ஆதார் எண்ணில் 9 மொபைல் போன்கள் இணைப்பு! அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அந்த தகவல்கள் பலவிதமாக கசிவதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது ஒரே ஆதார் எண்ணை வைத்து வெவ்வேறு நபர்கள் ஒன்பது சிம்கார்டு வாங்கியுள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
@PRIYARD என்ற டுவிட்டர் பயனாளி சமீபத்தில் தான் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் உபயோகித்து வரும் ஏர்டெல் அலுவலகத்திற்கு சென்று தனது மொபைல் எண்ணுடான் ஆதார் எண்ணை இணைக்க சென்றார்.
ஆனால் ஏர்டெல் அலுவலக அதிகாரி, அவர் குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் ஏற்கனவே ஒன்பது மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததும் டுவிட்டர் பயனாளி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார். இதுகுறித்து ஆதார் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களாக தகுந்த விளக்கம் கூறாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம், அந்த பயனாளிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளது. அவருடைய ஆதார் எண் ஒரே ஒரு மொபைலில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய அதிகாரி தவறுதலாக ஒன்பது எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியதாகவும் விளக்கமளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments