கோவை நகரத்திற்காக 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டிய அமெரிக்க தமிழர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையில் மெடிக்கல் கல்லூரியில் படித்து தற்போது அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ராஜேஷ் ரங்கசாமி என்பவர் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளுக்காக 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டி அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் மருத்துவராக இருந்து வரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ரங்கசாமி. இவர் கடந்த 1992ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மூளை, ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
தற்போது கோவையில் கொரோனா அதிகம் பரவி வரக் கூடிய சூழலில் அங்கு உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதை தனது அத்தை வாணி மூலமாக ராஜேஷ் ரங்கசாமி அறிந்து உடனடியாக நண்பர்களிடம் வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் தொடர்பு கொண்ட மருத்துவர் ராஜேஷ், தன்னுடைய மனைவியின் அறக்கட்டளை மூலமாக நிதி திரட்டினார். மருத்துவரின் முயற்சிக்கு கைமேல் பலனாக 48 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி கிடைத்தது
இதுகுறித்து ராஜேஷ் ரங்கசாமி கூறியபோது, ‘நான் படித்த கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று என்னுடைய நண்பர்களிடம் கூறினேன். ஒரு சில மணி நேரங்களில் 30 லட்ச ரூபாய் நிதி திரண்டது. 48 மணி நேரத்தில் ரூபாய் ஒரு கோடி நிதி கிடைத்தது. நிதி கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் என்பதும் அவர்களுக்கு கோவை எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு உதவ வேண்டும் என்றும், நான் படித்த ஊருக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர்கள் உதவி செய்துள்ளனர். இந்த பணம் கோவை மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout