மிஸ் அமெரிக்க அழகி 60 மாடி கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை… சோகச் சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் மிஸ் அமெரிக்க அழகிப் போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் 60 மாடி கட்டிடத்தில் இருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்நாட்டில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் அமெரிக்க அழகிப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர் ஜாஸ்லி ரிஸ்ட். 30 வயதான இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் பகுதியில் வசித்துவருகிறார். 60 மாடி கட்டிடத்தில் வசித்துவந்த இவர் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் இவரது தற்கொலை குறித்து விசாரித்த போலீசார் ஜாஸ்லி 29 ஆவது மாடியில் நின்றிருந்த சிசிடிவி காட்சிகளை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் ஜாஸ்லி 29 ஆவது மாடியில் இருந்தபோது குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்தக் கோரச் சம்பவத்திற்கு முன்பு ஜாஸ்லி “இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்“ எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிஸ் அமெரிக்க அழகியான ஜாஸ்லி ரிஸ்ட்டின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments