மிஸ் அமெரிக்க அழகி 60 மாடி கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை… சோகச் சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,February 01 2022]

அமெரிக்காவில் மிஸ் அமெரிக்க அழகிப் போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் 60 மாடி கட்டிடத்தில் இருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்நாட்டில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் அமெரிக்க அழகிப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர் ஜாஸ்லி ரிஸ்ட். 30 வயதான இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் பகுதியில் வசித்துவருகிறார். 60 மாடி கட்டிடத்தில் வசித்துவந்த இவர் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் இவரது தற்கொலை குறித்து விசாரித்த போலீசார் ஜாஸ்லி 29 ஆவது மாடியில் நின்றிருந்த சிசிடிவி காட்சிகளை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் ஜாஸ்லி 29 ஆவது மாடியில் இருந்தபோது குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்தக் கோரச் சம்பவத்திற்கு முன்பு ஜாஸ்லி “இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்“ எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிஸ் அமெரிக்க அழகியான ஜாஸ்லி ரிஸ்ட்டின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதியை அடுத்து மற்றொரு மெகா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரிய படங்களின் ரிலீஸ் தேதியும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது

தல தோனியை சந்தித்த சீயான் விக்ரம்: வைரல் புகைப்படம்!

 தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம் சந்தித்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு; 'டான்' ரிலீஸ் தேதி மாறுமா?

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில்

1 மில்லியன் பார்வைகளை கடந்தது 'தேஜாவு' டீசர் 

தமிழ் திரை உலகில் தனக்கேற்ற திரைக்கதைகளை தேர்வு செய்து தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி என்பதும் இவர் நடித்த 'தேஜாவு' என்ற திரைப்படத்தின்

16 பேரையும் அடிப்பேன்: 'வீரமே வாகை சூடும்' படத்தின் மாஸ் ஸ்னீக்பீக் வீடியோ

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.