கணவரின் கிட்னியை தானம் பெற்ற நபருக்கு 16 வருடங்கள் கழித்து மனைவியும் கிட்னி தானம் செய்த அதிசய நிகழ்வு

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

அமெரிக்காவில் 16 வருடங்களுக்கு முன்னர் கணவரின் கிட்னியை தானமாகப் பெற்ற நபருக்கு அவருடைய மனைவியும் கிட்னி தானம் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா எந்த பகுதியை சேர்ந்த ஜெப்ரி கிரங்கர் என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு உடல் நலமில்லாமல் இருந்தார். அவருக்கு கிட்னி மற்றும் கணையம் ஆகியவற்றில் கோளாறு இருந்ததால் இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பிரையன் என்பவரின் கிட்னி மற்றும் கணையத்தை ஜெப்ரி தானமாக பெற்றார். இதற்கு அவருடைய மனைவி டெர்ரி என்பவரும் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து தனது கணவர் பிரையனிடம் கிட்னி தானமாக பெற்ற ஜெப்ரிக்கு திடீரென அந்த கிட்னி வேலை செய்யவில்லை என்ற தகவலை அறிந்த டெர்ரி, உடனே தன்னுடைய கிட்னியையும் அதே நபருக்கு தானமாக கொடுக்க முன் வந்தார்.

கடந்த மார்ச் மாதம் டெர்ரியின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஜெப்ரிக்கு பொருத்தப்பட்டது. தற்போது ஜெப்ரி உடல்நலத்துடன் உள்ளார். 16 வருட இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரிடம் இருந்தும் ஒரே நபர் கிட்னி தானம் பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
 

More News

சத்யராஜ் மகளின் முக்கிய தகவலை புரமோஷன் செய்த சிவகார்த்திகேயன்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பது தெரிந்ததே. இந்த லாக்டவுன் நேரத்தில் மருந்துகள் வாங்கும்போது கவனமாக இருப்பது குறித்தும், காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும்

மனைவியை கொலை செய்துவிட்டு 2000கிமீ பயணம் செய்து மாமியாரையும் கொன்ற நபர்: அதிர்ச்சி தகவல்

பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதன் பின்னர் சுமார் 2000 கிலோ மீட்டர் பயணம் செய்து மாமியாரையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கோலி Vs ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ் மேன்??? டேவிட் வார்னரின் சுவாரசியமான கருத்துக் கணிப்பு!!!

இந்திய டுடே நடத்திய ஒரு நேர்காணலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமகாலத்தில் யார் சிறந்த பேட்ஸ் மேன் என்ற கேள்விக்கு சுவாரசியமான ஒரு பதிலை வழங்கி அசத்தி இருக்கிறார்

கொரோனா வைரஸ் பரவலுக்குக் காரணமான நாசக்காரனை கொன்று விட்டால் என்ன???  ஆய்வு என்ன சொல்கிறது!!!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் இது வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி என்பதைத் தெளிவு படுத்தி இருந்தனர்.

கொரோனா வைரஸ்க்கு புதிய பெயர் வைத்த அதிபர் ட்ரம்ப்!!!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் இருந்தே இந்த வைரஸை சீனாதான் பரப்பியது.