கணவரின் கிட்னியை தானம் பெற்ற நபருக்கு 16 வருடங்கள் கழித்து மனைவியும் கிட்னி தானம் செய்த அதிசய நிகழ்வு
- IndiaGlitz, [Tuesday,June 23 2020]
அமெரிக்காவில் 16 வருடங்களுக்கு முன்னர் கணவரின் கிட்னியை தானமாகப் பெற்ற நபருக்கு அவருடைய மனைவியும் கிட்னி தானம் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா எந்த பகுதியை சேர்ந்த ஜெப்ரி கிரங்கர் என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு உடல் நலமில்லாமல் இருந்தார். அவருக்கு கிட்னி மற்றும் கணையம் ஆகியவற்றில் கோளாறு இருந்ததால் இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பிரையன் என்பவரின் கிட்னி மற்றும் கணையத்தை ஜெப்ரி தானமாக பெற்றார். இதற்கு அவருடைய மனைவி டெர்ரி என்பவரும் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து தனது கணவர் பிரையனிடம் கிட்னி தானமாக பெற்ற ஜெப்ரிக்கு திடீரென அந்த கிட்னி வேலை செய்யவில்லை என்ற தகவலை அறிந்த டெர்ரி, உடனே தன்னுடைய கிட்னியையும் அதே நபருக்கு தானமாக கொடுக்க முன் வந்தார்.
கடந்த மார்ச் மாதம் டெர்ரியின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஜெப்ரிக்கு பொருத்தப்பட்டது. தற்போது ஜெப்ரி உடல்நலத்துடன் உள்ளார். 16 வருட இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரிடம் இருந்தும் ஒரே நபர் கிட்னி தானம் பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.