அமெரிக்கா விண்கலம் நாளை பறக்க இருக்கிறது!!! இன்று SpaceX நிறுவனம் நடத்திய ஒரு ராக்கெட் சோதனையில் படுதோல்வி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்கா விண்வெளித் துறையில் ஒரு பெரும் சாதனையாக நாளை 2 நாசா விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப இருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு விண்வெளித் துறையில் அமெரிக்கா நடத்த இருக்கும் ஒரு மிகப்பெரும் சாதனையாக இது உலகம் முழுவதும் பார்க்கப் படுகிறது. இந்த விண்கலம் எலான் மஸ்க் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான SpaceX என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை அன்றே விண்வெளிக்கு அனுப்ப இருந்த இந்த விண்கலம் கடைசி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப் பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் டெக்சாஸில் இருந்து அமெரிக்காவிற்கு சொந்தமான Crew Dragon விண்ணை நோக்கி பறக்க இருக்கிறது. இந்த விண்கலத்தை ஃபால்கான் 9 என்ற ராக்கெட் சுமந்து செல்ல இருக்கிறது. மேலும் அந்த விண்கலத்தில் பாப்பெஹன்சென் மற்றும் டக் ஹெர்லி என்ற 2 நாசா விண்வெளி வீரர்கள் விண்ணிற்கு செல்ல இருக்கிறார்கள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப் படுகிறது.
நாளை அமெரிக்காவின் விண்கலம் விண்ணிற்கு அனுப்பட இருக்கும் நிலையில் SpaceX நிறுவனம் மற்றொரு ராக்கெட் சோதனையை இன்று நடத்தியிருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்யும் விதமாக தயாரிக்கப்பட்ட SN4 என்ற ராக்கெட்டின் முன்மாதிரியைத்தான் தற்போது அந்நிறுவனம் சோதனை செய்து பார்த்திருக்கிறது. இந்த ராக்கெட் விண்ணை நோக்கி பறக்க இருந்த சமயத்தில் திடீரென கடும் தீ ராக்கெட்டைப் பற்றிக்கொண்டது. தீ பற்றிக் கொண்டதும் பக்கத்தில் இருந்த தீயணைப்பான் கருவிகள் மூலம் முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராக்கெட் வானை நோக்கி பறப்பதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற கோள்களுக்கு ராக்கெட்டை அனுப்பும் விதமாக இந்நிறுவனம் பல சோதனைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதில் MK1, SN1, SN3 ஆகிய ராக்கெட்டுகள் ஏற்கனவே சோதனை செய்து பார்க்கப் பட்டு இருக்கின்றன. இன்று SN4 என்ற ராக்கெட் இன்று சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. ராக்கெட்டை அனுப்பும் விதத்தில் இந்நிறுவனம் ஒரு புது மாதிரியை கையாண்டு இருப்பதாகவும் அது சோதனை நிலையில் தோல்வி அடைந்து விட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வெடித்த ராக்கெட்டில் பயன்படுத்தப் படுத்திய இருந்த இன்ஜின் (Raptor 20) இப்போது 2 ஆவது முறையாக சோதனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது என்றும் இதற்கு முன்னதாக Raptor 18 என்ற இன்ஜின் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
SpaceX நிறுவனம் இன்று நடத்தியிருக்கும் ராக்கெட் சோதனை, அமெரிக்காவிற்கு சொந்தமான விண்கலத் தயாரிப்பில் இருந்து முற்றிலும் வேறானது என்றே அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்காவிற்கு சொந்தமான Crew Dragon விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் வகையில் தயாரிக்கப் பட்டது என்றும் இன்று சோதனை செய்யப்பட் ராக்கெட் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வகையில் தயாரிக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் SpaceX நிறுவனம் தற்போது படுதோல்வியான ஒரு சோதனையை நடத்தி இருப்பது குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று நடத்தப்பட்ட ராக்கெட் சோதனை வேறுபட்டது எனக் கூறப்பட்டாலும் நாளை ஒரு மிகப்பெரிய விண்கலம் பறக்க இருக்கும் நிலையில் எதற்கு அந்நிறுவனம் சோதனையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். ஒருவேளை Crew Dragon க்கு முன்மாதிரியாகக் கூட இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப் பட்டு வருகிறது. புதன்கிழமை Crew Dragon பறக்க இருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு கவுண்டன் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இன்று அந்நிறுவனம் தயாரித்த ஒரு ராக்கெட் சோதனையில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இவை இரண்டும் தற்போது அமெரிக்காவின் விண்வெளித்துறை ஆய்வின் வளர்ச்சியை குறைத்து மதிப்பிடும் படியான எதிர்மறை கருத்துகளை கொண்டு வந்து விட்டதாகவும் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்கா SpaceX என்ற ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து விண்கலத்தின் தயாரிப்பை வாங்கியிருப்பது குறித்தும் தற்போது சில எதிர்மறைக் கருத்துகள் வைக்கப்படுகின்றன. இந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குமுன்பு விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றியை அதிபர் ட்ரம்ப் பெற்றுவிட வேண்டும் என விண்வெளித்துறை ஆய்வுகளில் அவசரம் காட்டுகிறார். தற்போது அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தவறிவிட்டத எனவும் பலக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் SpaceX நிறுவனம் தயாரித்த ராக்கெட் தீப்பிடித்து இருக்கிறது. முன்னதாக Crew Dragon கவுண்டன் பாதியிலேயே நிறுத்தப் பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் தற்போது எதிர்மறையாக பார்க்கப் பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments