அமெரிக்கா: இனவெறிக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் காவல் துறையினர் இனவெறுப்புடன் நடந்துக் கொண்டதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்கன் சில இடங்களில் வன்முறையாக மாறியதைக் குறித்து அமெரிக்கா அதிபர் காட்டமான கருத்தைத் தெரிவித்து இருந்தார். அவரது கருத்தால் மேலும் கறுப்பினத்தவர்கள் வெறுப்பிற்கு ஆளாதானகவும் அதனால் இன்றைக்கு வரைக்கும் போராட்டங்கள் தொடரப் படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போராட்டங்களுக்கு நடுவில் சில கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது என்றும் அந்தக் கொள்ளைச் சம்பவங்களால் போராட்டத்திற்கே இழுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. மத்திய புளோரிடாவில் கவுண்டி என்னும் இடத்தில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு எதிரே ஒரு வால்மார்ட் நிறுவனத்தின் பெரிய கட்டிடத்தில் ஒரு கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அங்கு நடந்த போராட்டங்களுக்கு பயந்து வால்மார்ட் நிறுவனம் தனது நிறுவனத்தை முழுவதுமாக மூடியிருக்கிறது. அதற்கு பின்பு 100க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தின் கடையை உடைத்து எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட 1 லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்த வீடியோ காட்சிகளையும் கவுண்டி ஹெரிப் தற்போது சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதைப்போலவே கடந்த ஜுன் 1 ஆம் தேதி மேற்கு பாம் பீட்ச் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவங்களையும் காவல் துறையினர் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. Miracle leaf Medical Marijuana மருந்து நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் போராட்டத்தின் மதிப்பையே குறைத்து விடும் எனவும் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பல உலகத் தலைவர்களும் போராட்டங்களின்போது வன்முறைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com