அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் முன்னிலை

அமெரிக்க அதிபர்‌ தேர்தல்‌ நேற்று நடைபெற்ற நிலையில் தற்போது பதிவான வாக்குகள்‌ எண்ணப்பட்டு முடிவுகள்‌ மற்றும் முன்னிலை விபரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்‌ முன்னிலை வகித்து வருவதாகவும் தெரிகிறது. சற்றுமுன் வெளியான தகவலின்படி ‌ஜோ பைடன்‌ 129 இடங்களிலும்‌ டிரம்ப்‌ 94 இடங்களிலும்‌ முன்னிலை பெற்றுள்ளனர்‌.

அதிபர்‌ டிரம்ப்‌ கென்டக்கி, இன்டியானா, ஒக்லாமா உள்ளிட்ட இடங்களில்‌ வெற்றி பெற்றுள்ளார்‌ என்பதும், ஜார்ஜியா, தெற்கு கரோலினா, ஆக்லாமோ, புளோரிடா போன்ற இடங்களில்‌ டிரம்ப்பின்‌ குடியரசுக்‌ கட்சி முன்னிலை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜோ பைடன்‌ அமெரிக்காவின்‌ முக்கிய மாநிலமான நியுயார்க்கை கைப்பற்றியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி வெர்மன்ட்‌, நியுஜெர்சி, மேரிலாண்ட்‌, இல்லியனோஸ்‌ உள்ளிட்ட இடங்களிலும்‌ ஜோ பைடனின்‌ ஜனநாயகக்‌ கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் டெக்ஸாஸ்‌, ஒஹையோ, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் ஜோபைடன் முன்னிலை பெற்றுள்ளார்‌ என்பதும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போது 129 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஜோபைடன் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்