அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் முன்னிலை

அமெரிக்க அதிபர்‌ தேர்தல்‌ நேற்று நடைபெற்ற நிலையில் தற்போது பதிவான வாக்குகள்‌ எண்ணப்பட்டு முடிவுகள்‌ மற்றும் முன்னிலை விபரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்‌ முன்னிலை வகித்து வருவதாகவும் தெரிகிறது. சற்றுமுன் வெளியான தகவலின்படி ‌ஜோ பைடன்‌ 129 இடங்களிலும்‌ டிரம்ப்‌ 94 இடங்களிலும்‌ முன்னிலை பெற்றுள்ளனர்‌.

அதிபர்‌ டிரம்ப்‌ கென்டக்கி, இன்டியானா, ஒக்லாமா உள்ளிட்ட இடங்களில்‌ வெற்றி பெற்றுள்ளார்‌ என்பதும், ஜார்ஜியா, தெற்கு கரோலினா, ஆக்லாமோ, புளோரிடா போன்ற இடங்களில்‌ டிரம்ப்பின்‌ குடியரசுக்‌ கட்சி முன்னிலை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜோ பைடன்‌ அமெரிக்காவின்‌ முக்கிய மாநிலமான நியுயார்க்கை கைப்பற்றியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி வெர்மன்ட்‌, நியுஜெர்சி, மேரிலாண்ட்‌, இல்லியனோஸ்‌ உள்ளிட்ட இடங்களிலும்‌ ஜோ பைடனின்‌ ஜனநாயகக்‌ கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் டெக்ஸாஸ்‌, ஒஹையோ, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் ஜோபைடன் முன்னிலை பெற்றுள்ளார்‌ என்பதும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போது 129 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஜோபைடன் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விராட் கோலி, தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய மதுரை உயர்நீதிமன்றம்… பூதாகரமாகும் விவகாரம்!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வரும் நிலையில் அதை தடை செய்யுமாறு மதுரை உயர்நிதிமன்ற கிளையில் நேற்று வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் ஒரு மனு ஒன்றை வழங்கி இருந்தார்.

கமல் கட்சியில் இணைந்த மோடியின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்த பெண்!

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஒரே ஒரு நாள் மட்டும் நிர்வகித்த பெண் இன்று கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்

விஜய்சேதுபதி ஜோடியாக மணிரத்னம் பட நாயகி: டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

பாஜகவில் அரசியல் அவதாரம் எடுக்கிறாரா சவுரவ் கங்குலி???

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து பிசிசிஐயின் தற்போதைய தலைவராக பதவி வகித்து வரும் சவுரவ் கங்குலி பாஜக சார்பாக முழுநேர அரசியல் பணியில் ஈடுபடப் போகிறார்

தலையில் ஹெல்மெட் இல்லை … இளைஞரிடம் 2 மீட்டர் நீளத்துக்கு சலானை நீட்டிய போலீசார்…

கர்நாடகாவில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் தொழிலாளி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹெல்மட் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.