கொரோனா மருந்தை கொடுக்காவிட்டால்? இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸை குணமாக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்யுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த டிரம்ப், இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தாலும் அமெரிக்காவிற்கு மட்டும் இந்த தடையை நீக்க வாய்ப்புள்ளது. நான் இதுகுறித்து இந்திய பிரதமர் மோடியிடம் பேசியுள்ளேன். அவரும் நல்ல பதிலை அளித்துள்ளார்
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் என நம்புகிறேன். ஒருவேளை ஏற்றுமதி செய்யாவிட்டாலும் ஓகேதான். ஆனால் இந்தியா மருந்தை தர மறுத்தால் தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments