அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா: மனைவிக்கும் பாதிப்பு என தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்துவரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலோனியா டிரம்ப் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலோனியா டிரம்ப் ஆகியோர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் இருவருக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதை அடுத்து இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறிய டிரம்ப், ‘எனக்கும் என்னுடைய மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். விரைவில் இந்த தொற்றில் இருந்து விடுபடுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tonight, @FLOTUS and I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments