டிரம்ப் உரையில் விவேகானந்தர், சச்சின், கோஹ்லி:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இன்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார், அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி

இந்தியாவின் விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர். கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது. வறுமையில் இருந்து பல கோடி இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி, உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணம்

இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு இந்தியா. இந்தியா எங்களது இதயத்தில் இடம் பிடித்த நாடு. மகாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்றதை பெருமையாக கருதுகிறேன்; உலக காதல் சின்னமான தாஜ்மகாலை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’ இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்