அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு: ட்விட்டர் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
- IndiaGlitz, [Saturday,January 09 2021]
சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தாலும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதனை அடுத்து ஜனவரி 20ஆம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கில் தவறான மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பதிவு செய்து வந்ததால் 15 நாட்களுக்கு டுவிட்டர் கணக்கை சஸ்பெண்ட் செய்வதாக டுவிட்டர் நிர்வாகம் அதிரடியாக சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது எடுத்துள்ள அடுத்த அதிரடி நடவடிக்கையாக அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமான முடக்கப்படுவதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் விதத்தில் ஒருசில கருத்துக்களை டிரம்ப் பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாகவும் டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் அவர் அதிபராக இருக்கும் வரை முடக்கி வைக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரின் பேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.