ரயில் தண்டவாளத்தில் வீல்சேருடன் சிக்கிகொண்ட 66 வயது முதியவர்: அதிர்ச்சி வீடியோ 

  • IndiaGlitz, [Thursday,August 13 2020]

அமெரிக்காவில் வீல் சேரில் சென்று கொண்டிருந்த ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டிலிருந்து வீல்சேரில் கிளம்பி கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவருடைய வீல்சேரில் உள்ள சக்கரம் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த நேரத்தில் ரயில் மிக அருகில் ரயில் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த ஆபத்தான சூழ்நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர் ஓடிச் சென்று அந்த வீசேரில் இருந்த முதியவை காப்பாற்ற முயற்சித்தார் ரயில் மிக மிக அருகில் நெருங்கி விட்டதை அறிந்ததும் அந்த வீல்சேரை அப்படியே கவிழ்த்து முதியவரை காப்பாற்றினார். இருப்பினும் முதியவரின் காலில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

காவல்துறை அதிகாரியின் சமயோசித நடவடிக்கையால் வீல்சேரில் இருந்த அந்த முதியவர் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை அதிகாரியின் சட்டை பொத்தானில் இருந்த கேமரா இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2 மாத குழந்தையை 45 ஆயிரத்துக்கு விற்ற தாய்: கொரோனா ஊரடங்கால் வறுமை?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலை இன்றி வருமானம் இன்றி கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் தற்கொலை: வேலைச்சுமை அதிகமா?

பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் பிவி ராமானுஜம் என்பவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கிணற்றில் விழுந்த குண்டு மனிதர்: தொப்பையால் உயிர் தப்பித்த அதிசயம்

கிணற்றில் தவறி விழுந்த குண்டு மனிதர் ஒருவர் தொப்பையால் உயிர் தப்பிய அதிசயம் சீனாவில் நடந்துள்ளது 

பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை: பாரதிராஜா பெருமிதம்

நடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாகி 42 வருடங்கள் ஆனதை அடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே

கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழும் தமிழகம்!!! அதிரடி நடவடிக்கைகள்!!!

இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.