கொரோனாவை விரட்டும் களிம்பு!!! உலகையே அசத்தும் புது கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

 

அமெரிக்காவின் மருந்து நிறுவனம் ஒன்று கொரோனாவைத் தடுக்கும் வகையிலான களிம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த களிம்பு மருந்தைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன. இந்நிலையில் உலகின் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான சோதனையில் இருந்தாலும் வெற்றிகரமான முடிவினை எட்டுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒருவேளை கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றிகரமான முடிவினை எட்டினாலும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் இத்தடுப்பூசி கிடைக்க எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்பதும் அடுத்த கேள்வியாக மாறியிருக்கிறது. இதனால் உலக விஞ்ஞானிகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அட்வான்ஸ்ட் பெனிட்ரேசன் டெக்னாலஜி எனும் நிறுவனம் டி3எக்ஸ் எனும் களிம்பு மருந்து தயாரித்துள்ளது. இந்தக் களிம்பை மூக்கின் நுனியில் 20 நொடிகள் வைத்தப் பின்பு சோதனை செய்து பார்த்தால் கொரோனா வைரஸ்கள் காணாமல் போவதும் சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது என விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியிருந்தனர். இதனால் கொரோனா வைரஸை அதன் நுழைவாயிலில் கட்டுப்படுத்தும் முயற்சியாக இது இருக்கும் எனவும் நோயின் தாக்கத்தை இது கணிசமாக குறைக்கும் எனவும் அட்வான்ஸ்டு பெனிட்ரேசன் மருந்து நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸின் தற்காப்புக்கு டி3எக்ஸ் களிம்பு மிகச்சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்காவின் உணவு மற்றம் மருந்து நிர்வாகம் டி3எக்ஸ் களிம்பை சக்திவாய்ந்த முதல் தடுப்பு நடவடிக்கையாக நம்பலாம் எனவும் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.