ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப்பணிக்காக நிர்வாண புகைப்படங்களை விற்ற மாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியா காட்டுத்தீ என்பது உலகின் மிகப்பெரிய அழிவு என்றும் இந்த காட்டுத் தீயினால் கோடிக்கணக்கான மரங்களும் லட்சக்கணக்கான காட்டு விலங்குகளும் நாசமடைந்து உள்ளன என்றும் இதற்கு முன் இவ்வளவு மிகப்பெரிய காட்டுத்தீயை உலகம் சந்தித்ததில்லை என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த காட்டுத் தீயை அணைக்க மாதக்கணக்கில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. மேலும் மில்லியன் கணக்கான டாலர்கள் இந்த காட்டுத் தீயை அணைக்க செலவு செய்யப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது
இந்த நிலையில் கைலன் வார்ட் என்ற 20 வயது அமெரிக்க மாடல் காட்டுத்தீயை அணைக்கும் மீட்பு பணிக்காக ரூபாய் 5 கோடி திரட்டி அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பணத்தை அவர் தனது நிர்வாண படங்களை விற்று சேர்த்துள்ளதாக தெரிகிறது
இது குறித்து கைலன் வார்ட்தனது டுவிட்டர் பக்கத்தில் ’என்னுடைய நிர்வாண படங்களை தனிப்பட்ட முறையில் தேவைப்படுவோர் 10 டாலர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இந்த பணம் ஆஸ்திரேலிய காட்டுத்தீ மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இரண்டே நாட்களில் சுமார் 5 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் அந்த பணத்தை அவர் காட்டு தீயணைப்பு மீட்பு பணிக்காக அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. காட்டுத்தீயை அணைக்க ரூ.5 கோடி வசூலித்தது நல்ல விஷயம் தான் என்றாலும் நிர்வாண படத்தை விற்று அதை செய்ய வேண்டுமா? என்று ஒருசிலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments