ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப்பணிக்காக நிர்வாண புகைப்படங்களை விற்ற மாடல்!

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

ஆஸ்திரேலியா காட்டுத்தீ என்பது உலகின் மிகப்பெரிய அழிவு என்றும் இந்த காட்டுத் தீயினால் கோடிக்கணக்கான மரங்களும் லட்சக்கணக்கான காட்டு விலங்குகளும் நாசமடைந்து உள்ளன என்றும் இதற்கு முன் இவ்வளவு மிகப்பெரிய காட்டுத்தீயை உலகம் சந்தித்ததில்லை என்றும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் இந்த காட்டுத் தீயை அணைக்க மாதக்கணக்கில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. மேலும் மில்லியன் கணக்கான டாலர்கள் இந்த காட்டுத் தீயை அணைக்க செலவு செய்யப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது 

இந்த நிலையில் கைலன் வார்ட் என்ற 20 வயது அமெரிக்க மாடல் காட்டுத்தீயை அணைக்கும் மீட்பு பணிக்காக ரூபாய் 5 கோடி திரட்டி அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பணத்தை அவர் தனது நிர்வாண படங்களை விற்று சேர்த்துள்ளதாக தெரிகிறது 

இது குறித்து கைலன் வார்ட்தனது டுவிட்டர் பக்கத்தில் ’என்னுடைய நிர்வாண படங்களை தனிப்பட்ட முறையில் தேவைப்படுவோர் 10 டாலர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இந்த பணம் ஆஸ்திரேலிய காட்டுத்தீ மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இரண்டே நாட்களில் சுமார் 5 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் அந்த பணத்தை அவர் காட்டு தீயணைப்பு மீட்பு பணிக்காக அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. காட்டுத்தீயை அணைக்க ரூ.5 கோடி வசூலித்தது நல்ல விஷயம் தான் என்றாலும் நிர்வாண படத்தை விற்று அதை செய்ய வேண்டுமா? என்று ஒருசிலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

தனுஷின் அடுத்த பட டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் வரும் 16ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சாப்ட்வேர் எஞ்சினியரின் லேப்டாப்பில் 11 இளம்பெண்களின் நிர்வாண வீடியோ! 9ஆம் வகுப்பு சிறுமியால் சிக்கினார்

திண்டுக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது லேப்டாப்பில் 11 இளம் பெண்களின் நிர்வாண வீடியோக்களை வைத்து இருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்த நாளில் ஏ.ஆர்.ரஹ்மானை ஆச்சரியப்படுத்திய 'கோப்ரா' படக்குழு!

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'கோப்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்

சமந்தாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி மற்றும் ஓ பேபி' ஆகிய மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே

'தர்பார்' படம் பார்க்கும் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.